மாண்புமிகு அம்மா கொண்டு வந்த அம்மா குடிநீர் திட்டத்தை முடக்கிய விளம்பர திமுக அரசு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை, நெல்லை பேருந்து நிலையங்களில் மக்களின் வரவேற்பை பெற்ற அம்மா குடிநீர் திட்டத்தை விளம்பர திமுக அரசு முடக்கியதால், வெயில் காலத்தில் குடிநீர் கிடைக்காமல் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். 

பேருந்து பயணத்தின் போது ஏழை மக்களும் சுகாதாரமான குடிநீரை பருக வேண்டும் என்ற உயரிய நோக்கில் கடந்த 2013ம் ஆண்டு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் அம்மா குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டது. அப்போதைய முதலமைச்சர் மாண்புமிகு அம்மா அவர்களால் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தால், தமிழகத்தின் அரசு பேருந்து நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் ஒரு லிட்டர் அம்மா குடிநீர் பாட்டில் 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. 

பொதுமக்களின் அமோக வரவேற்பை பெற்ற இந்த திட்டத்தை, விளம்பர திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் முற்றிலுமாக முடக்கியுள்ளது. இதனால், பேருந்து நிலையங்களில் குடிநீர் இன்றி பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அம்மா குடிநீர் கிடைக்காததால் வெயில் காலங்களில் வெளியே செல்லும் பயணிகள், அதிக விலை கொடுத்து குடிநீர் வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர். 

இதேபோல், நெல்லையிலும் அம்மா குடிநீர் திட்டம் முடக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். நெல்லை சந்திப்பு பெரியார் பேருந்து நிலையம், பாளையங்கோட்டை எம்.ஜி.ஆர் பேருந்து நிலையங்களில் அம்மா குடிநீர் திட்டம் முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது. இதனால், ஏழை எளிய மக்கள் குறைந்த விலையில் குடிநீர் கிடைக்காமல் இன்னலுக்கு ஆளாகி வருவதாக வேதனை தெரிவித்துள்ளனர். பேருந்து நிலையங்களில் பொதுமக்களுக்கு தரமான குடிநீர் விநியோகம் செய்வதற்கு விளம்பர திமுக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Night
Day