திருமண வீடியோ ஒளிபரப்பு உரிமையை விற்கவில்லை- நாக சைத்தன்யா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தனது திருமண வீடியோ ஒளிபரப்பு உரிமையை விற்றதாக பரவிய தகவலுக்கு நடிகர் நாக சைதன்யா மறுப்பு தெரிவித்துள்ளார். 

கடந்த 2017-ம் ஆண்டு நடிகை சமந்தாவை திருமணம் செய்த நாக சைதன்யா, பின்னர், 2021-ம் ஆண்டு விவாகரத்து பெற்றார். அதன் பிறகு அவருக்கும், நடிகை சோபிதா துலிபாலாவுக்கும், கடந்த ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதி நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. இவர்களது திருமணம் அடுத்த மாதம் 4ம் தேதி ஐதராபாத்தில் நடைபெற இருப்பதாக கூறப்படும் நிலையில், திருமண வீடியோவை நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியிட திட்டமிடப்படப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள நாக சைதன்யா, இது தவறான செய்தி என்றும், அப்படி எந்த ஒப்பந்தமும் இல்லை என்றும் கூறியுள்ளார்

Night
Day