ஜெயிலர்-2 படத்திற்கு HUKUM என தலைப்பு வைத்திருப்பதாக தகவல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நடிகர் ரஜினியின் ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்திற்கு HUKUM என பெயரிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்தாண்டு நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் உலகம் முழுவதும் 600 கோடிக்கு மேல் வசூலித்து மிகப்பெரிய சாதனை படைத்தது. தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படும் நிலையில், அதற்கு உக்கும் என பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஜெயிலர் முதல் பாகத்தில் இடம் பெற்றிருந்த உக்கும் பாடல் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில், தற்போது இரண்டாம் பாகத்திற்கு HUKUM என பெயரை பரிசீலித்து வருவதாக திரை வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Night
Day