ரீ ரிலீஸ் ஆகிறதா நடிகர் விக்ரமின் ஜெமினி திரைப்படம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நடிகர் விக்ரமின் ஜெமினி திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2002 ஆம் ஆண்டில் சரண் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியானது ஜெமினி திரைப்படம். இந்த படம் வெளியாகி 22 வருடங்களான நிலையில், ஜெமினி பட புகைப்படத்தை நடிகர் விக்ரம் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் தன்மேல் அன்பு பொழியும் அனைவருக்கும் மிக்க நன்றி என குறிப்பிட்டுள்ளார். சுவாரசியமான அப்டேட் இன்னும் சில தினங்களுக்கு பின் வரும் என்றும் குறிப்பிட்டுள்ளதால் ஜெமினி படம் ரீ ரிலிஸ் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

varient
Night
Day