சமந்தா விவாகரத்து விவகாரம் - சுரேகா தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்தை திரும்பப் பெற்றார்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாக சைதன்யாவிடமிருந்து சமந்தா விவாகரத்து பெற்றது தொடர்பாக, தெலங்கானா அமைச்சர் கொண்டா சுரேகா தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்தை திரும்பப் பெற்றுள்ளார். 

இது குறித்து தனது வலைதளப்பதிவில், ஒரு தலைவர் பெண்களை எப்படி இழிவுபடுத்துகிறார் என்பதை சுட்டிக்காட்டுவது மட்டுமே தனது நோக்கமே தவிர, சமந்தாவின் உணர்வுகளை புண்படுத்த அல்ல என்று கூறியுள்ளார். தனது வார்த்தைகளால் சமந்தாவோ அல்லது ரசிகர்களோ புண்பட்டிருந்தால், நிபந்தனையின்றி அவற்றை திரும்பப் பெறுவதாகவும், தயவு செய்து வேறு மாதிரி எடுத்துக் கொள்ள வேண்டாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

varient
Night
Day