அன்பான தாய் Angry-ஆனது ஏன்... பார்க்கிங் பஞ்சாயத்து...

எழுத்தின் அளவு: அ+ அ-

பார்க்கிங் திரைப்படத்தில் வரும் காட்சிகளை மிஞ்சும் வகையிலான உண்மை சம்பவம் நடிகை சரண்யாவுக்கும், அவரது வீட்டின் அருகே வசிப்பவருக்கும் ஏற்பட்டு இருதரப்பும் காவல் நிலையம் வரை சென்றுள்ளது. காரை நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறு பெரிதானது எப்படி... விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

நாயகன் படத்தில் அறிமுகமான நடிகை சரண்யா, எம்டன் மகன், முத்துக்கு முத்தாக, வேலையில்லா பட்டதாரி, கொடி, குட்டி புலி உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்து முத்திரை பதித்துள்ளார். தற்போது, சென்னை விருகம்பாக்கம் பத்மாவதி நகரில் தனது குடும்பத்துடன் அவர் வசித்துவருகிறார். இவரது வீட்டருகே ஸ்ரீதேவி என்பவர் குடும்பத்துடன் 25 வருடங்களாக வசித்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் கார் பார்க்கிங் தொடர்பாக மோதல் ஏற்பட்டு வந்துள்ளது. 

ஞாயிற்று கிழமை மதியம் ஸ்ரீதேவி மருத்துவமனைக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து தனது காரை வெளியே எடுப்பதற்காக, தனது வீட்டு வாசலில் இருந்த இரும்பு கேட்டை திறந்துள்ளார். அப்போது சாலையில் நிறுத்தி வைத்திருந்த நடிகை சரண்யாவின் கார் மீது கேட் மோதியதால் கார் சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது. 

இதனால் ஆத்திரமடைந்த சரண்யா மற்றும் அவரது கணவர் பொன்வண்ணன் ஆகியோர் ஸ்ரீதேவி வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இருதரப்பினருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில் ஒருவரையொருவர் தகாத வார்த்தையால் திட்டிக் கொண்டதாகவும் தெரிகிறது. 

இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ள நிலையில், சரண்யா, பொன்வண்ணன் ஆகியோர் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ஸ்ரீதேவி, விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதேபோல் நடிகர் சரண்யாவும், ஸ்ரீதேவி மீது புகார் அளித்துள்ளார். புகார்களை பெற்றுக் கொண்ட போலீஸார் இருதரப்பினரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னையில் பொதுமக்களுக்கு கார் பார்க்கிங் பிரச்சனைகள் தொடர்கதையாகி வரும் நிலையில், இந்த பிரச்னையால் நடிகை நடிகை ஒருவரும் சிக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Night
Day