"சினேகன் பவுண்டேஷன்" தொடர்பான புகாரில் பாஜக நிர்வாகியும், நடிகையுமான ஜெயலட்சுமி கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பாடலாசிரியர் சினேகனின் 'சினேகம் பவுண்டேஷன்' புகார் தொடர்பாக பாஜக நிர்வாகியும் நடிகையுமான ஜெயலட்சுமியை போலீசார் கைது செய்தனர். 'சினேகம் பவுண்டேஷன்' யாருக்கு சொந்தம்? என்பது குறித்து பாடல் ஆசிரியர் சினேகன் மற்றும்  ஜெயலட்சுமி ஆகியோர் மாறி மாறி காவல் நிலையங்களில் புகார் அளித்து வந்தனர். இது தொடர்பாக சென்னை அடுத்த திருமங்கலத்தில் உள்ள ஜெயலட்சுமியிடம் திருமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதன் தொடர்ச்சியாக அவரை போலீசார் கைது செய்தனர். மோசடியான ஆவணங்களின் மூலம் சினேகம் பவுண்டேஷனை உரிமை கொண்டாடியது விசாரணையில் தெரியவந்ததையடுத்து கைது செய்யப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Night
Day