மடப்புரம் கோவில் காவலாளி கொலை வழக்கில் சிபிஐ விசாரணை 10வது நாளாக நீடிப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பாக 10வது நாளாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். திருப்புவனம் காவல் நிலையம், மடப்புரம் கோவில், அஜித்குமார் தாக்கப்பட்ட கோவில் கோசாலை பகுதி உள்ளிட்ட பகுதிகளில் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். அஜித்குமாரின் சகோதரர், நண்பர்கள், கோவில் பணியாளர்கள் உள்ளிட்டோரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து இன்று 10வது நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், திருப்புவனம் அரசு மருத்துவமனை மருத்துவர் கார்த்திகேயன், செவிலியர் சாந்தி, உதவியாளர் அழகர், கோவில் பணியாளர்கள் கண்ணன் மற்றும் கார்த்திக் ஆகியோர் சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு இன்று ஆஜராகினர். அவர்களிடம் தனித்தனியாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

Night
Day