க்ரைம்
நிலப்பிரச்னை - இருதரப்பினர் மோதல்
நிலப்பிரச்னை - இருதரப்பினர் மோதல்மயிலாடுதுறை மாவட்டம் கஞ்சா நகரம் கிராமத...
நாமக்கல் அருகே பட்டியலின சிறுவர்களுக்கு முடிவெட்ட மறுத்த சலூன் கடை உரிமையாளர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். புதுச்சத்திரம் அருகே திருமலைப்பட்டி காமராஜர் நகரை சேர்ந்த அருண்பாண்டியன் தனது மகன்களுக்கு முடி வெட்ட திருமலைப்பட்டியில் உள்ள ஒரு சலூன் கடைக்கு அவர்களை அழைத்துச் சென்றுள்ளார். அப்போது பட்டியலின மக்களுக்கு முடிவெட்டக்கூடாது என ஊர் கட்டுப்பாடு இருப்பதாக கூறி சலூன் கடை உரிமையாளர் முத்து, முடி வெட்ட மறுத்து விட்டார். இதுகுறித்து அருண்பாண்டியன் புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சலூன் கடைக்காரரான முத்துவை கைது செய்தனர். மேலும் கட்டுப்பாடு விதித்ததாக செல்வராசு மற்றும் ராஜேஷ்குமார் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
நிலப்பிரச்னை - இருதரப்பினர் மோதல்மயிலாடுதுறை மாவட்டம் கஞ்சா நகரம் கிராமத...
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த நடைமுறை நாடு முழுவதும் பின்பற்றப்படு?...