ஓசூரில் மது போதையில் இளைஞர் அடித்துக்கொன்ற 5 பேர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே  இளைஞர் அடித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

பேடரப்பள்ளி பகுதியில் வடமாநிலத்தவர்கள் தங்கியிருந்த வீட்டில் வியாழக்கிழமை இளைஞர் ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இது தொடர்பாக சிப்காட் போலீசார் நடத்திய விசாரணையில் உயிரிழந்தவர் சூடசந்திரம் பகுதியை சேர்ந்த உமேஷ் என்பது தெரியவந்தது. உமேஷ் மற்றும் அவரது நண்பர்கள் சந்துரு, பார்த்தசாரதி, மகாசக்தி, விஜயகுமார், கார்த்திக் ஆகிய 6 பேரும் சேகர் என்பவர் மூலமாக அந்த வீட்டில் மது அருந்திய போது, ஏற்பட்ட  தகராறில் உமேஷை  அவர்கள் கட்டையால் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததும் தெரியவந்துள்ளது. 

varient
Night
Day