எழுத்தின் அளவு: அ+ அ- அ
மொராக்கோவில் பெய்து வரும் கனமழை காரணமாக, சகாரா பாலைவனம் மீண்டும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. உலகின் மிகப்பெரிய வெப்ப பாலைவனமான சகாரா, ஆப்பிரிக்காவின் வட பகுதியில் 90 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்து உள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஆப்ரிக்க நாடான மொராக்கோவில் உள்ள சகாரா பாலைவன பகுதியில் பெய்த கன மழையால் அங்கு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு வியப்பை ஏற்படுத்தியது. இந்த மழையால் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வறண்டு கிடந்த இரிக்கி ஏரியில் மீண்டும் தண்ணீர் நிரம்பியது. இந்நிலையில் மொராக்கோவில் தற்போது மீண்டும் பெய்துவரும் கன மழையால் அந்நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள சகாரா பாலைவன பகுதி வெள்ளக் காடாக மாறியுள்ளது. உலகின் மிகவும் வறண்ட இடமாக கருதப்படக் கூடிய சகாரா பாலை வனத்தில் கனமழை பெய்வதும் வெள்ளம் ஏற்படுவதும் சுற்றுச் சூழல் ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.