எழுத்தின் அளவு: அ+ அ- அ
இந்தியர்கள் என்பதற்கான ஆவணங்கள் உள்ளது எனக் கூறி நாடு கடத்த கூடாது என உத்தரவிட கோரிய மனு மீது கட்டாய நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் தடைவித்துள்ளது.
பஹல்காமில் உள்ள சுற்றுலா தலத்தில் கடந்த 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இந்தியாவில் தங்கியுள்ள பாகிஸ்தானியர்கள் பாகிஸ்தானுக்கு திரும்ப வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இதனைதொடர்ந்து பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் இந்தியாவில் இருந்த வெளியேறி வருகின்றனர். இதனையடுத்து ஜம்மு & காஷ்மீரை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளனர். இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் முன்பு விசாரணை நடத்தினர். அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தனது மனுதாரர்கள் இந்திய பிரஜை என்பதற்கான ஆவணங்கள் அவர்களிடம் உள்ளது என்றும் 1987ம் ஆண்டு மனுதாரரின் தந்தை ஜம்மு காஷ்மீரின் முசாபராபாத்தில் பிறந்தவர் எனவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மனுதாரர்களின் ஆவணங்களை சரி பார்க்குமாறு உத்தரவிட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதற்காக கால நிர்ணயம் செய்யவில்லை எனவும் ஆனால் விரைந்து ஆவணங்களை சரி பார்க்குமாறு அறிவுறுத்தினர். அதுவரை சம்பந்தப்பட்ட ஆறு பேரை நாடு கடத்துதல் தொடர்பாக கட்டாய நடவடிக்கை எடுக்கக் கூடாது என உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்தனர்.