எழுத்தின் அளவு: அ+ அ- அ
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் தேயிலை தோட்ட உரிமையாளரிடம் இருந்து நிலத்தை அபகரிக்க அவரை திமுக நிர்வாகி உருட்டுக்கட்டையால் தாக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கோத்தகிரி அருகே கடக்கோடு பகுதியை சேர்ந்த லட்சுமணன் சென்னையை சேர்ந்த ஒருவருக்கு தனக்கு சொந்தமான தேயிலை தோட்டத்தை கடந்த 2021 ஆண்டு விற்றுள்ளார். தோட்டத்தை வாங்கியவர் கேட்டுக்கொண்டதின்பேரில், விற்ற இடத்தில் முள்வேலி அமைக்க லட்சுமணன் வந்துள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த திமுக நிர்வாகியான அருண், சிலருடன் வந்து லட்சுமணன் மற்றும் அவரது மகன் மல்லி மற்றும் சுனில் என்பவரை கடுமையாக தாக்கினர்.
இதில் காயமடைந்த சுனில், மல்லி கோத்தகிரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் குற்றம்சாட்டப்பட்ட திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என திமுக நிர்வாகிகள் கூறியதாக தெரிகிறது. இதனால் காவல்துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி சுனில் மற்றும் மல்லி கோரிக்கை விடுத்துள்ளனர். நிலத்தை அபகரிக்க முயன்றவர்களுக்கு காவல்துறை உடந்தையாக செயல்படுவதாக நில உரிமையாளர் குற்றஞ்சாட்டியுள்ளார்.