தென்கொரியா மீது வடகொரியா ராட்சத பலூன்கள் மூலம் குப்பைகளை வீசியதால் ஆத்திரம்!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வடகொரியாவுக்கு எதிராக எல்லையில் ஒலிபெருக்கி பிரசாரம் மீண்டும் தொடங்கப்படும்

என்று தென் கொரியா அறிவித்துள்ளது.  வடகொரியா அணு ஆயுதங்களை அடிக்கடி சோதனை 
நடத்தி வருவதை கண்டித்து, அதற்கு எதிரான பிரசுரங்கள் அடங்கிய பலூன்களை தென்கொரிய தன்னார்வலர்கள் கடந்த மாதம் வட கொரியாவுக்குள் அனுப்பினர். அதன் எதிரொலியாக வடகொரியா குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகளை ஆயிரக்கணக்கான ராட்சத பலூன்களில் தென்கொரியாவில் வீசியது. இந்நிலையில் தென்கொரிய தேசிய பாதுகாப்பு இயக்குனர் தலைமையில் உயர் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், வடகொரியாவுக்கு எதிராக எல்லையில் ராட்சத ஒலி பெருக்கிகளை வைத்து அந்நாட்டுக்‍கு எதிரான பிரசாரத்தை மீண்டும் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிராக வடகொரியா நேரடி ராணுவ தாக்குதல் நடத்தக்கூடும் என்றும் வீரர்களை தயார் நிலையில் வைத்திருக்குமாறு தென்கொரிய ராணுவ கமாண்டர்களுக்கு அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

varient
Night
Day