தாய்லாந்து - கம்போடியா இடையே போர் கடும் சண்டை

எழுத்தின் அளவு: அ+ அ-

தாய்லாந்து - கம்போடியா நாடுகளுக்கு இடையிலான தாக்குதலில் அப்பாவி மக்கள் 10 பேர் கொல்லப்பட்டனர். இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருவதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. 
 
தாய்லாந்தின் சுரின் என்ற மாகாணமும் கம்போடியாவின் ஒட்டார் மீஞ்சே மாகாணமும் இரு நாட்டு எல்லையில் அமைந்துள்ளன. இந்நிலையில் சுரின் மாகாணத்தில் உள்ள கோயில் ஒன்றுக்கு கம்போடியா சொந்தம் கொண்டாடி வருகிறது. இது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பிரச்சனை நீடித்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக மோதல் ஏற்படும் சூழல் நிலவியது. இந்நிலையில் இரு நாடுகளுக்கும் இடையே இன்று காலை மோதல் தொடங்கியது.

இதன் காரணமாக கம்போடியாவின் ராணுவ நிலைகளை குறி வைத்து தாய்லாந்து பீரங்கி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக கம்போடியாவும் தாய்லாந்து மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் அப்பாவி மக்கள் 10 பேர் கொல்லப்பட்டனர். இதன் காரணமாக போர் பதற்றம் அதிகரித்துள்ளதன் காரணமாக இரு நாடுகளும் தங்கள் எல்லைகளை மூடியுள்ளன. ரஷ்யா- உக்ரைன், ஈரான் - இஸ்ரேல் போரை தொடர்ந்து ஆசிய நாடுகள் இரண்டும் மோதிக்கொள்வது உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Night
Day