எலான் மஸ்க்‍ எக்ஸ் தளத்தில் வீடியோ பகிர்வு: பொதுமக்‍கள் அதிர்ச்​சி!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸின் குரலை செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் மூலம் மாற்றி எக்ஸ் தளத்தில் வீடியோ பகிரப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா அதிபா் தோ்தல் வருகிற நவம்பா் 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் களமிறங்குகிறார்.
கமலா ஹாரிஸின் குரலை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் மாற்றி, டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். இதனிடையே அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் கமலா ஹாரிஸுக்கு பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி ஆதரவு தெரிவித்துள்ளார். அமெரிக்காவை, இந்திய வம்சாவளி பெண் வழிநடத்துவது மகிழ்ச்சியளிப்பதாகவும், நாட்டை சர்வாதிகாரத்தை நோக்கி நகர்த்த நினைப்போரின் முயற்சியை கமலா ஹாரிஸால் மட்டுமே முறியடிக்க முடியும் என்று தான் நம்புவதாகவும், சல்மான் ருஷ்டி தெரிவித்துள்ளார்.

Night
Day