இந்தியா, அமெரிக்‍க கடலோர காவல்படையினர் கூட்டு பயிற்சி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்திய கடலோர காவல்படை மற்றும் அமெரிக்‍க கடலோர காவல்படை இணைந்து பல்வேறு பாதுகாப்பு மற்றும் கொள்ளை தடுப்பு பயிற்சிகளை மேற்கொள்ள உள்ளன. 
வருகிற 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் கடல் பாதுகாவலர்கள் 2024 என்ற பெயரில் முதல் முறையாக இரு நாட்டு கடலோர பாதுகாப்பு படைவீரர்கள் அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் பாதுகாப்பு பயிற்சியில் ஈடுபட உள்ளனர். கடல் கொள்ளையர்களை தடுப்பது, திடீர் அச்சுறுத்தல்களை சமாளிப்பது, ட்ரோன் தாக்‍குதல் , கண்காணிப்பு மற்றும் மீட்பு பணிகள் கடல் மாசு தடுப்பு நடவடிக்‍கை , போதை பொருள் கடத்தல் தடுப்பு போன்ற பலவகை பயிற்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

Night
Day