"கடவுள் ஆசீர்வதிப்பார்' பைபிளை வாங்க ஆதரவாளர்களுக்கு வேண்டுகோள் - அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்,  "கடவுள் ஆசீர்வதிப்பார்' என்ற பைபிளை வாங்குமாறு தனது ஆதரவாளர்களிடம் கூறியிருப்பது பேசுபொருளாகியுள்ளது. ட்ரம்ப் வெளியிட்டுள்ள வீடியோவில், கிராமி விருது வென்ற பாடகர் மற்றும் பாடலாசிரியர் லீ கிரீன்வுட் வெளியிட்ட 60 டாலர் விலையுள்ள பைபிளின் பதிப்பை வாங்குமாறு தனது ஆதரவாளர்களை வலியுறுத்தி உள்ளார். அமெரிக்கர்களிடமிருந்து கிறிஸ்தவமும் மதமும் காணாமல் போன மிகப்பெரிய விஷயங்கள் என்றும் கடவுள் அமெரிக்கா பைபிளை ஆசீர்வதிப்பார் என்றும் கூறியுள்ளார். இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள அவரது எதிர்ப்பாளர்கள், புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் நெருங்கும் நிலையில் தனது நிதிச் சவாலை சமாளிக்க, அரசியலுடன் வர்த்தகத்தையும் ட்ரம்ப் இணைப்பதாக சாடியுள்ளனர். 

Night
Day