56 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு இன்று தேர்தல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

15 மாநிலங்களில் காலியாக உள்ள 56 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு ஏற்கெனவே 41 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட நிலையில், 15 இடங்களுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. இதில் பல இடங்களில் சுமுகமாக உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு விடும் சூழலில், காங்கிரஸ் ஆளும் இரண்டு மாநிலங்களில் மூன்று இடங்களிலும், உத்தரபிரதேசத்தில் ஒரு இடத்திலும் கடும் போட்டி நிலவுகிறது. எதிர்க்கட்சி எம்எல்ஏக்களை வளைக்க பாஜக முயற்சிப்பதாக கூறி  காங்கிரசும் சமாஜ்வாதியும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. கர்நாடகாவிலும் இமாசலப்பிரதேசத்திலும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். உத்தரபிரதேசத்தில் போட்டியின்றி 7 உறுப்பினர்களை பாஜகவும் 3 உறுப்பினர்களை சமாஜ்வாதியும் தேர்வு செய்ய முடியும் என்ற நிலையில் பாஜக 8 வேட்பாளர்களை நிறுத்தியுள்ளதால் எம்எல்ஏக்களை பாதுகாப்பதில் சமாஜ்வாதியும் கவனம் செலுத்தி வருகிறது. 

Night
Day