2029-ல் ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியம்-குழு பரிந்துரை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான அறிக்கையை குடியரசு தலைவர் திரவுபதி முர்முவிடம், முன்னாள் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் சமர்பித்தார். 

நாடு முழுவதும் ஒரே சமயத்தில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல் நடத்துவது குறித்து ஆராய கடந்த 2023ஆம் ஆண்டு, முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் மத்திய அரசு குழு அமைத்தது. இந்த குழுவினர் கடந்த 191 நாள்களாக நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர், எதிர்க்கட்சிகள், வல்லுநர்கள் குழுவுடன் ஆலோசனை நடத்தினர். அதன் முடிவில் 18ஆயிரத்து 626 பக்கங்கள் கொண்ட தங்களது ஆய்வுக்குழுவின் அறிக்கையை குடியரசு தலைவர் திரவுபதி முர்முவிடம் ராம்நாத் கோவிந்த் சமர்பித்தார். அதில் நாடு முழுவதும் ஒரே சமயத்தில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலை நடத்தலாம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல் நடத்திய 100 நாள்களுக்குள், உள்ளாட்சி தேர்தலையும் நடத்தலாம் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Night
Day