ரெப்போ வட்டி விகிதம் மேலும் குறைய வாய்ப்பு..! - ஆர்பிஐ ஆளுநர் மல்ஹோத்ரா சூசகம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்தியாவில் ரெப்போ வட்டி விகிதங்கள் மேலும் குறைய வாய்ப்பு உள்ளதாக ஆர்பிஐ ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா சூசகமாக தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக பேசிய அவர், நாட்டின் பணவீக்கம் சாதகமாக இருப்பதால், ரெப்போ வட்டி குறைப்புக்கு அதிக வாய்ப்பு உள்ளதாகவும், அனைத்து சாத்தியக் கூறுகளையும் ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்தார். எனினும் ரெப்போ ரேட் குறைக்கப்படுமா? என்பது டிசம்பர் முதல் வாரத்தில் நடைபெறும் நிதி கொள்கை கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார். தற்போது ரெப்போ ரேட் விகிதம் 5 புள்ளி 5 சதவீதமாக இருக்கும் நிலையில், வட்டி மேலும் குறையுமா? என்பதே கடன் வாங்கியவர்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

Night
Day