அயோத்தி ராமர் கோவில் பிரகாரத்தைச் சுற்றி வந்து தெய்வங்களை வழிபட்டார் பிரதமர் மோடி

எழுத்தின் அளவு: அ+ அ-

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் காவிக் கொடி ஏற்றச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அங்குள்ள கோயில் பிரகாரத்தை சுற்றி வந்து தெய்வங்களை வழிபாடு செய்தார்.

உத்தரபிரதேச மாநிலம் அயோத்யாவில் கட்டப்பட்ட ராமர் கோயில் சில ஆண்டுகளுக்கு முன் திறந்து வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மேலும் சில கட்டுமானங்கள் நடைபெற்று வந்த நிலையில் அதன் பணிகள் தற்போது நிறைவடைந்தன. இந்நிலையில் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில் பிரமாண்ட காவிக் கொடியை பிரதமர் மோடி ஏற்றி வைக்கவுள்ளார். 

கோயிலின் 161 அடி  பிரமாண்ட  கோபுரத்தில் 10 அடி உயரமும், 20 அடி நீளமும் கொண்ட முக்கோண வடிவ கொடியில், ராமரின் வீரத்தையும், அறிவுக்கூர்மையையும் சித்தரிக்கும்வகையில் சூரியன் படமும், ஓம் என்ற எழுத்தும் பொறிக்கப்பட்ட காவிக் கொடியை ஏற்றி வைக்கவுள்ளார். 

இதற்காக உத்தரபிரதேச மாநிலம் அயோத்யா சென்ற பிரதமர் நரேந்திர மோடி ராமர் பாதையில் காரில் வலம் வந்தார். அவருக்கு பல்லாயிரக்கணக்கான பொதுமக்களும் பக்தர்களும் உற்சாக வரவேற்பளித்தனர். 

இதனை அடுத்து, அயோத்தி ராமர் கோயில் வளாகத்தில் உள்ள சப்தமந்திரில் பிரதமர் மோடி வழிபாடு செய்தார். மகரிஷி வசிஷ்டர், மகரிஷி விஸ்வாமித்திரர், மகரிஷி அகஸ்தியர், மகரிஷி வால்மீகி உள்ளிட்ட சிலைகளை பிரதமர் மோடி வழிபாடு செய்தார்.


varient
Night
Day