மோடியின் நண்பர்களின் ரூ.16 லட்ச கோடி கடன் தள்ளுபடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பிரதமர் மோடி தன்னுடைய கோடீஸ்வர நண்பர்களின் 16 லட்ச கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்ததாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட ராகுல், 16 லட்ச கோடி ரூபாயை வைத்து விவசாய கடனை தள்ளுபடி செய்திருக்கலாம் எனவும், எரிவாயு, வேலைவாய்ப்பு ஆகியவற்றுக்கு அத்தொகையை ஒதுக்கி இருக்கலாம் எனவும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மேலும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடியின சமூகங்களை சேர்ந்த இளைஞருக்கு இலவசமாக கல்வியை வழங்கி இருக்கலாம் எனக்கூறிய ராகுல் காந்தி, இந்திய மக்களின் வலியை குணப்படுத்தப்பட வேண்டிய பணம் அதானி போன்ற கோடீஸ்வரர்களுக்காக செலவிடப்பட்டது என வேதனை தெரிவித்துள்ளார். 

Night
Day