இந்தியா
51,000 பேருக்கு பணி நியமன ஆணை
பிரதமரின் ரோஜகார் திட்டத்தின் கீழ் 51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணையை பிரத?...
நம் நாட்டின் புதிய ராணுவ தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திரா திவேதி நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு நாட்டின் ராணுவ தலைமை தளபதியாக பதவியேற்ற மனோஜ் பாண்டேயின் பதவி காலம் கடந்த மே 31-ம் தேதி நிறைவடைந்த நிலையில் மக்களவை தேர்தலையொட்டி அவரது பதவிகாலம் ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. மனோஜ் பாண்டே பதவி காலம் வருகிற 30-ம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில் இந்திய ராணுவத்தின் புதிய தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திரா திவேதி நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசின் பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தற்போது ராணுவ துணைத்தளபதியாக உள்ள உபேந்திரா திவேதி, வருகிற 30-ம் தேதி தலைமை தளபதியாக பொறுப்பேற்கிறார்.
பிரதமரின் ரோஜகார் திட்டத்தின் கீழ் 51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணையை பிரத?...
விளம்பர திமுக அரசை கண்டித்து ஆசிரியர்கள் நடத்தி வரும் போராட்டத்தில் பெண்...