பிரபல சட்ட வல்லுநர் பாலி நரிமன் காலமானார் - அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்தியாவின் மூத்த வழக்கறிஞரும், பிரபல சட்ட நிபுணருமான பாலி நரிமன் வயதுமூப்பு காரணமாக காலமானார். பத்மபூஷன், பத்மவிபூஷன் விருதுகளை பெற்ற பாலி நரிமன், இந்திய வழக்கறிஞர்களின் சங்கத் தலைவராக 19 ஆண்டுகளாக இருந்து வந்தார். 70 ஆண்டிற்கும் மேலாக வழக்கறிஞர் தொழிலில் ஈடுபட்ட பாலி நரிமன் 1972-ம் ஆண்டு மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், முதுமை மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக பாலி நரிமன் 95-வது வயதில் காலமானார். பாலி நரிமன் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

Night
Day