இந்தியா
கெஜ்ரிவால் முதலமைச்சர் அலுவலகத்திற்கு செல்லக் கூடாது என நிபந்தனை...
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் பெற...
வங்கதேசத்தில் இயல்பு நிலை திரும்பியதையடுத்து பத்து நாட்களுக்கு பிறகு இணைய சேவை மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. சுதந்திரப் போராட்ட தியாகிகள் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் 30 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வலியுறுத்தி கடந்த 15-ம் தேதி மாணவர்கள் தொடங்கிய போராட்டம் பெரும் வன்முறையாக மாறியது. நாடு முழுவதும் பரவிய கலவரத்தில் காவல்துறை துப்பாக்கிச்சூட்டில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அரசு தொலைக்காட்சி நிலையத்திற்கு தீ வைப்பு உள்ளிட்ட பொதுச் சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன. கலவரத்தால் பள்ளி, கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டதுடன் அரசு அலுவலகங்களும் மூடப்பட்டன. இணைய சேவை முடக்கப்பட்டது. வன்முறையை கட்டுக்குள் கொண்டு வர ராணுவம் குவிக்கப்பட்டது. இதனிடையே வன்முறைக்கு வித்திட்ட 30 சதவீத இட ஒதுக்கீட்டை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. இதனால், அங்கு படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வருகிறது. இதையடுத்து முடக்கப்பட்ட இணைய சேவை மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் பெற...
பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் 116ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு அஇஅதிமுக ப...