நாடு முழுவதும் 5 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஐந்தாயிரத்தை கடந்துள்ளது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் சீராக அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், நேற்று ஒரே நாளில் 498 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதன்மூலம் இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 364ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும், இவர்களுடன் சேர்த்து 221 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும், நேற்று ஒரே நாளில் உயிரிழந்த 4 பேருடன் சேர்ந்து இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55ஆக அதிகரித்துள்ளது.

Night
Day