திருப்பதி லட்டு விவகாரம்: தேவஸ்தானம் மற்றும் சிபிஐ மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தாக்கல் மனு தள்ளுபடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பதி லட்டு விவகாரம் ஓர் அரசியல் விளையாட்டு என்பதால் ஆந்திர அரசு, திருமலா திருப்பதி தேவஸ்தானம் மற்றும் சிபிஐ மீது நடவடிக்கை எடுக்க கோரிய பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் கண்டிப்புடன் தள்ளுபடி செய்தது. லட்டு பிரசாத விவகாரம் தொடர்பாக மனுதாரர் பால் என்பவர், ஆந்திர அரசு, திருப்பதி தேவஸ்தானம் மற்றும் சிபிஐ மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்ற நீதிபதி கவாய் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் தரப்பில் திருப்பதிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை முன்வைத்தார்.

30 லட்சம் மக்கள் மட்டுமே வசிக்‍கும் திருப்பதிக்கு எப்படி மாநில அந்தஸ்து வழங்க முடியும்? என கேள்வி எழுப்பிய நீதிபதி, தொடர்ந்து இது போன்ற மனுக்கள் விசாரணைக்கு உகந்ததல்ல எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

varient
Night
Day