அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி சாலைகளில் வெள்ளம் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

தேனி மாவட்டம், வைகை அணையில் இருந்து விவசாய தேவைக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், மதுரை வைகையாற்றில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக, யானைக்கல் தரைப்பாலம் ஒட்டிய வைகை வடகரை சாலையில் வெள்ளநீர் முழங்கால் அளவிற்கு சூழ்ந்துள்ளது. இதனால் அந்த வழியாக செல்லக்கூடிய வாகனங்கள் நீரில் மூழ்கியபடி செல்கின்றன.  தடுப்பணையில் ஆகாய தாமரை செடிகள் ஆக்கிரமிப்பால் வெள்ளநீர் செல்ல முடியாமல் சாலையோரங்களில் தேங்குவதாக மக்கள் குற்றச்சாட்டினர்.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், அக்ராகரம், ஒகேனக்கல் பகுதிகளில் கனமழை பெய்தது. கனமழை காரணமாக வெப்பத்தின் தாக்கம் குறைந்துள்ளதால், மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

அதே போல், திருப்பூர் மாவட்டம், ஆண்டிபாளையம், கருவம்பாளையம், ஆலங்காடு, பாரப்பாளையம், வெடத்தலாங்காடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக இடியுடன் கனமழை பெய்த நிலையில், குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை வெளுத்து வாங்கியது. ஓசூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், உத்தனப்பள்ளி, நாகமங்கலம், லாலிக்கள் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக வெளுத்து வாங்கிய கனமழையால் சாலைகளில் மழை நீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.

Night
Day