பீகார் முதற்கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்

எழுத்தின் அளவு: அ+ அ-

பீகார் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்குப் பதிவு நடைபெற்று வரும் 121 தொகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.

பீகாரில் மொத்தமுள்ள 243 தொகுதிகளுக்கு நவம்பர் 6 மற்றும் 11ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் எதிர்க் கட்சிகளின் இந்தியா கூட்டணி இடையே கடும் போட்டி நிலவுகிறது. தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி, அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி, ஆர்ஜேடி தலைவர் தேஜ்ஸ்வி யாதவ் உள்ளிட்டோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

கடந்த சில நாட்களாக பரபரப்பாக நடந்த தேர்தல் பிரசாரம் நேற்று முன்தினம் மாலையுடன் முடிவடைந்த நிலையில், 18 மாவட்டங்களை உள்ளடக்கிய 121 சட்டசபை தொகுதிகளில் இன்று முதல்கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.  121 தொகுதிகளில் மொத்தம் 3 கோடியே 75 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 10 லட்சத்து 72 ஆயிரம் பேர் புதிய வாக்காளர்கள் ஆவர். மொத்தம் ஆயிரத்து 314 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் 122 பெண் வேட்பாளர்களும், ஒரு திருநங்கை வேட்பாளரும் அடங்குவர். முதல் கட்ட தேர்தலுக்காக 45 ஆயிரத்து 341 வாக்​குச்​சாவடிகள் அமைக்​கப்​பட்​டுள்​ளன.

இந்த நிலையில் பலத்த பாதுகாப்புடன் வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு துவங்கியது. இதையடுத்து வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.

முதல்கட்ட தேர்தலையொட்டி, வாக்குப்பதிவு நடைபெறும் மையங்களில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மொத்தம் ஆயிரத்து 650 கம்பெனி பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். முக்கிய கட்டிடங்களிலும்  பாதுகாப்புக்கான நிறுத்தப்பட்டுள்ள பாதுக. ரோந்து பணியிலும் ஈடுபட்டுள்ளனர். வாக்குச்சாவடிகள் மற்றும் அவற்றை சுற்றிய பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

Night
Day