டெல்லி ஆம் ஆத்மி அரசு மீதான நம்பிக்‍கை வாக்‍கெடுப்பு வெற்றி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆளும் ஆம் ஆத்மி அரசு சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்‍கை வாக்‍கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளது.

டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை கவிழ்க்க பாரதிய ஜனதா முயற்சிப்பதாக முதலமைச்சர் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியிருந்தார். இதையடுத்து சட்டப்பேரவையில் நம்பிக்கை தீர்மானத்தை கொண்டுவரப்போவதாக நேற்று அறிவித்தார். இதன்பனி டெல்லி சட்டபேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை கெஜ்ரிவால் கொண்டுவந்தார். இந்த நம்பிக்‍கை தீர்மானத்துக்‍கு ஆதரவாக 54 உறுப்பினர்கள் வாக்களித்தனர். ஒரு உறுப்பினர் எதிராக வாக்களித்தார். நம்பிக்கை வாக்கெடுப்பு வெற்றி பெற்றது குறித்து பேசிய கெஜ்ரிவால், ஆம் ஆத்மியின் ஒரு எம்.எல்.ஏ. கூட பிரிந்து செல்லவில்லை என்று தெரிவித்தார்.

Night
Day