இந்தியா
ராஜஸ்தானில் போர் விமானம் விழுந்து விபத்து
ராஜஸ்தானில் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான போர் விமானம் கீழே விழுந்து ...
உத்தரப்பிரதேசம் ஞானவாபி மசூதியில் கண்டெடுக்கப்பட்ட சிவலிங்க சிலையை வழிபட அனுமதி கோரிய மனுவை 8 வாரங்களில் விசாரித்து முடிக்க விசாரணை நீதிமன்றத்திற்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த 2022 மே மாதம் உத்திரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டது. இதனை வழிபடுவதற்கு தடையற்ற அனுமதி கோரி வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக தற்போதுவரை விசாரணை நீதிமன்றம் எந்த ஒரு முடிவும் எடுக்காத நிலையில், அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் விவேக் சோனி என்பவர் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், ஞானவாபி மசூதியில் கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கத்தை வழிபடுவதற்கும் பூஜை செய்வதற்கும் தடையற்ற அனுமதி கோரிய மனுவை 8 வாரங்களில் விசாரணை செய்து முடிக்க உத்தரவிட்டது.
ராஜஸ்தானில் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான போர் விமானம் கீழே விழுந்து ...
திருப்பூரில் சிக்கன்னா அரசு கல்லூரி எதிரே உள்ள ஒரு வீட்டில் இருந்த 9 சிலிண...