ஜார்க்கண்ட்டில் 2வது கட்ட வாக்குப்பதிவு

எழுத்தின் அளவு: அ+ அ-

மகாராஷ்டிராவை தொடர்ந்து ஜார்க்கண்ட் மாநிலத்தில் 2வது மற்றும் இறுதிக்‍ கட்டமாக 38 சட்டப்பேரவை தொகுதிகளுக்‍கு வாக்‍குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தமுள்ள 81 தொகுதிகளில் 43 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு கடந்த 13ம் தேதி தேர்தல் நடைபெற்றது. எஞ்சிய 38 சட்டசபை தொகுதிகளுக்கான இறுதிக்கட்ட தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், அவரது மனைவி கல்பனா சோரன், எதிர்க்‍கட்சி தலைவரான பாஜகவை சேர்ந்த அமர் குமார் உள்பட மொத்தம் 528 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 

காலை 7 மணிக்குத் துவங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. மொத்தம் ஒரு​ கோடியே 23 லட்சம் வாக்‍காளர்கள் வாக்‍களிக்‍க வசதியாக 14 ஆயிரத்து 218 வாக்‍குச்சாவடிகள் அமைக்‍கப்பட்டு உள்ளன. வாக்குச்சாவடி மையங்களில் காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் ஜனநாயக கடமையாற்றி வருகின்றனர்.

வாக்குப்பதிவு நிறைவடைந்த உடன் மாலை 6.30 மணிக்கு தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிடலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் ஆகிய இரு மாநிலங்களிலும் பதிவாகும் வாக்குகள் வரும் 23ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

Night
Day