ஜார்கண்ட் மாநில முதல்வராக இன்று பதவியேற்கிறார் சம்பாய் சோரன்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஜார்கண்ட் புதிய முதலமைச்சராக ஹேமந்த் சோரன் அமைச்சரவையில் போக்குவரத்து, பழங்குடியின மற்றும் பட்டியலின நலத் துறை அமைச்சராக இருந்த சம்பாய் சோரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன்தான் முதலமைச்சராவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தனது நம்பிக்கைக்கு உரிய சம்பாய் சோரனை முதலமைச்சர் ஆக்கியுள்ளார் ஹேமந்த் சோரன்.  காங்கிரசும் ஆதரவளித்துள்ள நிலையில, சட்டப்பேரவையில் தங்களுக்குப் போதுமான பெரும்பான்மை உள்ளதாக ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா எம்.எல்.ஏ.க்கள் தெரிவித்துள்ளனர். சம்பாய் சோரன் இன்று பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

varient
Night
Day