ஜார்கண்ட் அமைச்சர் உதவியாளர் வீட்டில் ரூ.25 கோடி பறிமுதல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஜார்க்கண்ட்டில் அமைச்சரின் உதவியாளர் வீட்டில் நடத்திய சோதனையில் 25 கோடி ரூபாய் பணத்தை அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். 

ஜார்க்கண்ட் மாநில அரசின் பல்வேறு திட்டங்களில் முறைகேடு நடந்திருப்பதாக புகார்கள் எழுந்ததையடுத்து, ஊரக வளர்ச்சித்துறை பொறியாளர் வீரேந்திர ராம் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து அம்மாநில ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஆலம்கிர்ஆலமின் உதவியாளர் சஞ்சீவ்லால் என்பவரது வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை செய்தனர். அப்போது பீரோவில் இருந்து கட்டு கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கைப்பற்றப்பட்ட பணத்தின் மதிப்பு 25 கோடி ரூபாய்க்கும் மேல் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

varient
Night
Day