கேரள மாநிலம் வயநாட்டில் கடும் நிலச்சரிவு

எழுத்தின் அளவு: அ+ அ-

கேரள மாநிலம் வயநாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக மீண்டும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் வசிக்‍கும் பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். 

கேரளாவில் கடந்தாண்டு ஜூலை 30ம் தேதி பெய்த பெருமழையால், நிலச்சரிவு ஏற்பட்டு முண்டக்கை, சூரல்மலை உள்ளிட்ட பல இடங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள், கட்டடங்கள் மண்ணில் புதைந்தன. 400க்கும் மேற்பட்டோர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தனர். 

இந்த பெருந்துயர சம்பவம் நிகழ்ந்து ஓராண்டை நெருங்கும் நிலையில் தற்போது வயநாட்டில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக சூரல் மலை, முண்டக்கை பகுதிகளில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர் மழையால் அப்பகுதிகளில் மீண்டும் நிலச்சரிவு ஏற்படும் அபாயமும் எழுந்துள்ளது. 

கடந்த ஆண்டு ஏற்பட்ட நிலச்சரிவு சோக சம்பவத்திலிருந்து இன்னும் மீளாத மக்கள், தற்போது நிலச்சரிவு அபாயத்தில் அச்சத்தில் உறைந்துள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தாழ்வான பகுதிகளில் வசிக்கக்கூடிய மக்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்‍கப்பட்டுள்ளனர். நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ள பகுதிகளில் பொதுமக்கள் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது. தீயணைப்பு, காவல்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் மழை பெய்யும் பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Night
Day