இந்தியா
ஆந்திராவை நெருங்கும் மோன்தா புயல்
ஆந்திர கரையை நெருங்கும் தீவிர புயலான மோன்தா காரணமாக கடலோர பகுதிகளில் பலத?...
பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இந்திரா உணவகத்தை முதல்வர் சித்தாரமையா, துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் திறந்து வைத்தனர். விமான நிலையத்தில் உள்ள ஓட்டல்களில் உணவுகளின் விலை அதிகமாக இருப்பதாக தெரிவித்த நடுத்தர வாசிகள் மற்றும் வாடகை கார் ஓட்டுநர்கள், கர்நாடக அரசிடம் இந்திரா உணவகம் அமைக்க கோரிக்கை விடுத்தனர். பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் அமைக்கப்பட்ட இந்திரா உணவகத்தை முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவகுமார் உள்ளிட்டோர் திறந்து வைத்தனர். 5 ரூபாய்க்கு காலை உணவும், மதிய உணவு 10 ரூபாய்க்கும், இரவு உணவு பத்து ரூபாய்க்கும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. தமிழகத்தில் மாண்புமிகு அம்மா அறிமுகப்படுத்திய அம்மா உணவகத்தை பின்பற்றி இந்திரா உணவகத்தை கர்நாடக அரசு அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
ஆந்திர கரையை நெருங்கும் தீவிர புயலான மோன்தா காரணமாக கடலோர பகுதிகளில் பலத?...
நடிகர் ரவி மோகனின் திரைப்படத்திற்கு "Bro Code" எனும் பெயரை பயன்படுத்த டெல்லி உய?...