இந்தியா
டெல்லி தாஜ் பேலஸ் ஹோட்டலுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்...
டெல்லியில் உள்ள தாஜ் பேலஸ் ஹோட்டலுக்கு போலி வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப...
கர்நாடக மாநிலத்தில் ஐஸ்கீரிம் சாப்பிட்ட இரட்டை குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெட்டஹள்ளி பகுதியை சேர்ந்தவர் பூஜா. இவருக்கு ஒன்றரை வயதில் திரிசூல், திரிஷா என இரட்டை குழந்தைகள் இருந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் அப்பகுதிக்கு வந்த தள்ளுவண்டி ஐஸ்கிரீம் வியாபாரியிடம் இருந்து பூஜா தனது குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்துள்ளார். அந்த ஐஸ்கிரீமை சாப்பிட்ட சிறிது நேரத்தில் திரிசூல், திரிஷாவுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இருவரையும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், திரிசூல், திரிஷாவும் சிகிச்சை பலனின்று உயிரிழந்தனர். இதனிடையே, ஐஸ்கிரீம் சாப்பிட்டதால்தான், குழந்தைகள் உயிரிழந்ததாக பூஜா கண்ணீர் மல்க குற்றம்சாட்டினார்.
டெல்லியில் உள்ள தாஜ் பேலஸ் ஹோட்டலுக்கு போலி வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப...
பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் 117-ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை அண?...