எழுத்தின் அளவு: அ+ அ- அ
பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் 117-ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை அண்ணாசாலையில் உள்ள அவரது திருவுருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பேரறிஞர் பெருந்தகையின் திருவுருவப் படத்திற்கு அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
தமிழர்களின் வாழ்வில் நீக்கமற கலந்திருப்பவரும், நம் இயக்கத்தின் உயிர் மூச்சாகவும், தமிழ்ச் சமூகத்தின் உயர்வுக்கென வாழ்ந்த மாபெரும் தலைவராகவும் விளங்கிய பேரறிஞர் அண்ணாவின் 117-ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப்படத்திற்கு அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து, கழக நிர்வாகிகள் தொண்டர்களுக்கு அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தார்.
இந்நிகழ்ச்சியில் புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மாவின் வழியில் பயணிக்கும் கழக நிர்வாகிகளும், கழகத் தொண்டர்களும் திரளாக கலந்துகொண்டனர்.