கன்வார் யாத்திரைக்காக வெள்ளை துணியால் மறைக்கப்பட்ட மசூதி - காங். கண்டனம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கன்வார் யாத்திரைக்காக உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள மசூதி ஒன்று வெள்ளைத்துணிகளால் மறைக்கப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. அண்மையில் தொடங்கிய கன்வார் யாத்திரையில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில், உத்தராகண்ட் மாநிலம் ஹரித்வார் நகரில், கன்வார் யாத்திரை வழியில் உள்ள மசூதி வெள்ளைத்துணியால் மறைக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, தற்போது வெள்ளைத்துணிகள் அகற்றப்பட்டன. 

varient
Night
Day