ஆக்ரா விமானப்படை விபத்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக்-29 போர் விமானம் உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா அருகே இன்று விழுந்து நொறுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் அதம்பூரில் இருந்து மிக்-29 போர் விமானம் ஒன்று பயிற்சிக்காக ஆக்ராவுக்குப் புறப்பட்டது. வழியில் திடீரென  விமானம் ஆக்ரா அருகே உள்ள சோனிகா கிராமத்தையொட்டிய வயலில் விழுந்து நொறுங்கி தீப்பற்றி எரிந்தது. விமானம் கீழ் விழுவதற்கு முன்பாகவே விமானிகள் இருவரும் பத்திரமாக விமானத்தில் இருந்து வெளியேறி பாராசூட் மூலம் உயிர் தப்பினர். விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மிக்-29 ரக போர் விமானம் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிவது இது முதல் முறை அல்ல. கடந்த செப்டம்பர் 2-ம் தேதி ராஜஸ்தானின் பார்மரில் இதேபோல் விமானம் விழுந்து நொறுங்கியது. மிக்-29 விமானம்  சோவியத் ரஷ்யா உருவாக்கிய மேன்மைமிக்க போர் விமானமாகும். இது 1987-ம் ஆண்டு இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்டது.  பாதுகாப்பான சாதனைப் பதிவுகளைக் கொண்டுள்ள இந்த விமானம் தற்போது விபத்துக்குள்ளாகி வருவது குறித்து விமானப் படை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

varient
Night
Day