மீனாட்சி அம்மன் கோவிலில் தடுத்து நிறுத்தினர்- நமிதா குற்றச்சாட்டு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்ய சென்றபோது இந்து என்பதற்கான சான்றிதழ் கேட்டு கோயில் அதிகாரிகள் அடவாடியில் ஈடுபட்டதாக நடிகை நமிதா குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக சமூகவலைதளத்தில் வீடியோ வெளியிட்டுள்ள நடிககை நமிதா, உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு தனது கணவருடன் சாமி தரிசனம் செய்ய சென்றபோது, கோயில் அதிகாரி  தன்னை தடுத்து நிறுத்தி, இந்து என்பதற்கான சான்று உள்ளதா? என கேட்டதாக கூறியுள்ளார். பின்னர் குங்குமம் வழங்கி, அதனை வைத்துக் கொண்ட பின்னரே தன்னை கோயிலுக்குள் அனுமதித்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், தன்னிடம் அவமரியாதையாக நடந்து கொண்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நடிகை நமிதா வலியுறுத்தி உள்ளார். 

varient
Night
Day