ஈரோடு: கீழ்பவானி பாசன வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க விவசாயிகளின் எதிர்ப்பு
May 21 2022 3:44PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கீழ்பவானி கால்வாயில் கான்கிரீட் அமைக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி, ஈரோடு மாவட்டம் முகாசி அனுமன் பள்ளியில் விவசாயிகளின் கவன ஈர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட விவசாயிகள், கீழ்பவானி கால்வாயில் கான்க்ரீட் தளம் அமைக்க கூடாது என கண்டன தீர்மானம் நிறைவேற்றினர். இத்திட்டத்தினை, அரசு ரத்து செய்யவும், கான்கிரீட் அமைப்பதற்கு பதிலாக கரைகளை பலப்படுத்தி, மதகுகளை சீரமைக்கவும் அப்போது வலியுறுத்தப்பட்டது.