கன்னியாகுமரி : தேவாலயத்தில் கொலை - திமுக பிரமுகரை கைது செய்யக்கோரி போராட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கன்னியாகுமரி மாவட்டம் மைலோடு அருகே நாம் தமிழர் நிர்வாகி அடித்து கொலை செய்யபட்ட விவகாரத்தில், திமுக ஒன்றிய செயலாளர் ரமேஷ்பாபு மிரட்டிய ஆடியோ வெளியாகி உள்ளது. மடத்துவிளை பகுதியை சேர்ந்த சேவியர்குமார் நாம் தமிழர் கட்சியின் தக்கலை ஒன்றிய தலைவராக பதவி வகித்து வந்துள்ளார். மைலோடு பகுதியில் உள்ள புனித மிக்கேல் அதிதூதர் தேவாலயத்தின் வரவு செலவு கணக்கு தொடர்பாக, சமீபத்தில் பங்குத்தந்தையிடம் பேச்சுவார்த்தைக்கு சென்றுள்ளார். அப்போது, திமுக தக்கலை ஒன்றிய செயலாளர் ரமேஷ்பாபு உள்ளிட்டோர், சேவியர் குமாரை அயன்பாக்சால் அடித்துக் கொலை செய்து விட்டு தப்பிச்சென்றனர். இந்த நிலையில், கொலை செய்வதற்கு முன்பாக சேவியர் குமாரை திமுக தக்கலை ஒன்றிய செயலாளர் ரமேஷ்பாபு ஆபாச வார்த்தைகளால் மிரட்டிய ஆடியோ வெளியாகி உள்ளது. 

Night
Day