வேலூர் - பட்டப் பகலில் திமுகவினர் பணப்பட்டுவாடா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவதையொட்டி, தேர்தல் பறக்‍கும் படையினர் ஆங்காங்கே சோதனையில் ஈடுபட்டு, ஆவணங்களின்றி கொண்டுவரப்படும் பணம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். 

ராமநாதபுரம் அருகே உள்ள குஞ்சார்வலசை சோதனைச் சாவடியில் வாகன தேர்தல் பறக்‍கும் படையினர் தணிக்‍கையில் ஈடுபட்டிருந்தபோது, திருச்சியில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி வந்த அரசு பேருந்தை நிறுத்தி சோதனை நடத்தினர். சக்‍திவேல் என்ற பயணியின் பையை சோதனை செய்ததில், 10 லட்சம் ரூபாய் இருந்தது கண்டுபிடிக்‍கப்பட்டது. அவரிடம் அந்த பணத்திற்குரிய ஆவணங்கள் இல்லாததால் அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்து ராமநாதபுரம் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

திருவண்ணாமலை நகரில் உள்ள ஆனைகட்டி தெருவில் செயல்பட்டு வரும் ராஜேஸ்வரி சிட்பண்ட்ஸ் நிறுவனத்தில் தேர்தல் பறக்‍கும்படை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அங்கு பணிபுரியும் மேலாளர் திருமுகம் என்பவர், கணக்‍கு காட்டப்படாமல் வைத்திருந்த 5 லட்சம் ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்து திருவண்ணாமலை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

பெரம்பலூரில் ஒரே நாளில் பட்டுவாடா பணம் மற்றும் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துவரபட்ட பணம் உட்பட 5 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். பெரம்பலூரில் உள்ள தனியார் கல்லூரியில் ஆசிரியராக பணிபுரியும்  இசை அமுதா என்பவர் திமுக சார்பில் தொண்டமாந்துறை கிராமத்திலுள்ள வாக்காளர்களுக்கு கொடுத்து வந்த 1 லட்சத்து 95 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். அதே போல் அங்காளக்குறிச்சியை சேர்ந்த கொளஞ்சி என்பவர் உரிய ஆவணங்களின்றி இரு சக்கர வாகனத்தில் எடுத்து சென்ற 3 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.

போளூர் - செங்கனம் சாலையில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கர்நாடகா மாநிலத்திலிருந்து இருந்து செங்குணம் பகுதியை நோக்கி சென்ற விலை உயர்ந்த சொகுசு காரில் உரிய ஆவணம் இன்றி எடுத்துச் சென்ற ஏராளமான வெளிமாநில மதுபாட்டில்களையும், விலை உயர்ந்த சொகுசு காரையும் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து போளூர் காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.




Night
Day