பொதுமக்‍கள் எளிதில் புகார் அளிக்‍க வசதியாக, மேம்படுத்தப்பட்ட பிரத்யேக டிஜிகாப் செயலி - சென்னை மாநகர காவல்துறை அறிமுகம்

Jun 14 2019 3:37PM
எழுத்தின் அளவு: அ + அ -
பொதுமக்‍கள் எளிதில் புகார் அளிக்‍க வசதியாக அதற்கான பிரத்யேக டிஜிகாப் 2.0 என்ற மேம்படுத்தப்பட்ட புதிய செயலியை மாநகர காவல்துறை இன்று அறிமுகம் செய்துள்ளது.

பொதுமக்‍கள் தாங்கள் இருக்‍கும் இடத்தில் இருந்தபடியே காவல்துறையில் புகார் தெரிவிக்‍க வசதியாக டிஜிகாப் என்ற செயலி கடந்த பிப்ரவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த செயலி தற்போது மேலும் சில வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டது. சென்னை வேப்பேரியில் இன்று இந்த புதிய செயலியை அறிமுகம் செய்துவைக்‍கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாநகர காவல்துறை ஆணையர் திரு.ஏ.கே.விஸ்வநாதன், கூடுதல் காவல்துறை இயக்‍குநர் திருமதி.சீமாஅகர்வால் ஆகியோர் கலந்துகொண்டு புதிய செயலியை அறிமுகம் செய்து வைத்தனர். காணாமல்போகும் அல்லது திருடப்படும் வாகனங்கள், அலைபேசிகள் தொடர்பான புகார்களை தெரிவிப்பதோடு புகாரின் தற்போதைய நிலவரம், முதல்தகவல் அறிக்‍கை குறித்த விவரங்கள், தங்கள் பகுதிக்‍கு அருகில் உள்ள காவல்நிலையம் போன்ற பல்வேறு விவரங்களையும் இதன் மூலம் தெரிந்துகொள்ள முடியும். இந்நிகழ்ச்சியில் பேசிய திரு.ஏ.கே.விஸ்வநாதன், மேம்படுத்தப்பட்ட டிஜிகாப் 2.0 செயலி பொதுமக்‍களுக்‍கு பெரிதும் பயனளிப்பதாக இருக்‍கும் என கூறினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00