எழுத்தின் அளவு: அ+ அ- அ
அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பாக முப்படை தளபதிகளுடன் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை மேற்கொண்டார்.
ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப் உள்ளிட்ட எல்லையோர மாநிலங்களை குறிவைத்து பாகிஸ்தான் டிரோன், ஏவுகணை தாக்குதல் நடத்திய நிலையில் இந்திய படைகளும் உடனடியாக பதிலடி கொடுத்தது. நடுவானிலேயே அவை அழிக்கப்பட்டன. பதற்றம் அதிகரித்துள்ள சூழலில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து டெல்லியில் முப்படை தளபதிகளுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்தக் கூட்டத்தில் கடற்படைத் தளபதி தினேஷ் திரிபாதி, ராணுவத் தளபதி உபேந்திர திவேதி, விமானப்படைத் தளபதி ஏ.பி. சிங், ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவை தலைவரான ஜெனரல் அனில் சவுகான் , பாதுகாப்பு துறை செயலர் ஆர்.கே.சிங்கும் பங்கேற்றார்.
இதனை தொடர்ந்து எல்லை பாதுகாப்புப்படை இயக்குநர் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படை இயக்குநர்களுடன் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்த உள்ளார்.