எழுத்தின் அளவு: அ+ அ- அ
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு 880 ரூபாய் உயர்ந்து புதிய உச்சம் தொட்டுள்ளது. தங்கம் விலை சவரன் 66 ஆயிரம் ரூபாயை நெருங்குவதால் நகைப் பிரியர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 880 ரூபாய் அதிகரித்து, ஒரு சவரன் 65 ஆயிரத்து 840 ரூபாய்க்கும், கிராமுக்கு 110 ரூபாய் விலை உயர்ந்து ஒரு கிராம் 8 ஆயிரத்து 230 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் கிராம் 2 ரூபாய் உயர்ந்து 112 ரூபாய்க்கும், கிலோவுக்கு 2 ஆயிரம் ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 12 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.