மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் - பெங்களூரு அணி சாம்பியன்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் 2-வது சீசனில் கேப்டன் ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் வென்றது. முதலில் ஆடிய டெல்லி அணி 18.3 ஓவர்களில் 113 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின்னர் களமிறங்கிய பெங்களூரு அணி 19.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த நிலையில் எந்த ஒரு ஈகோவும் இன்றி ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர்களும் முன்னாள் கேப்டனுமான விராட் கோலி வீராங்கனைகளுக்கு வாழ்த்து தெரிவித்தார். உடனடியாக வீடியோ கால் செய்த விராட் கோலி மைதானத்திலேயே வீராங்கனைகள் ஒவ்வொருவரிடமும் வாழ்த்து தெரிவித்து உற்சாகப்படுத்தினார். இந்த காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

varient
Night
Day