பாரீசில் தொடங்குகிறது 2024 ஒலிம்பிக் போட்டிகள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பாரீஸ் ஒலிம்பிக் தொடக்க விழாவிற்கு பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து மற்றும் டேபிள் டென்னிஸ் வீரர் ஷரத் கமல் ஆகியோர் இந்தியாவின் தேசிய கொடியை ஏந்திச் செல்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2024 ஒலிம்பிக் 2024 பாரீசில் வரும் 26-ல் தொடங்கி ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி.உஷா வெளியிட்டுள்ள அறிக்கையில், தொடக்க விழாவில் ஷரத் கமலுடன் இணைந்து டெபிள் டென்னிஸ் வீராங்கனை பி.வி.சிந்து தேசியக் கொடி ஏந்திச் செல்வார் எனக் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே நான்கு முறை ஒலிம்பியனும், 2012 ஒலிம்பிக்கில் ஆண்கள் 10 மீட்டர் ஏர் ரைபிள் வெண்கலப் பதக்கம் வென்றவருமான ககன் நரங், பாரீஸ் 2024 ஒலிம்பிக் இந்தியக் குழுவின் தலைவராக செயல்படுவார் என்ற அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

Night
Day